எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
செப்டம்பர் 2023-ல், ஜி 20 உச்சிமாநாடு இந்தியாவில் நடந்தது. இதில் பசுமை ஹைட்ரஜனுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 5 உயர்நிலை தன்னார்வக் கொள்கைகளை பிரகடனம் செய்து ஜி 20 தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த கோட்பாடுகள் ஒரு ஒருங்கிணைந்த பாதையை உருவாக்க உதவுகின்றன. நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பசுமை ஹைட்ரஜன் துறைக்கு உதவ பொதுக்கொள்கையில் மாற்றங்களை பரிந்துரைக்கலாம், கடல் நீரையும் நகராட்சி கழிவு நீரையும் உற்பத்திக்கு பயன்படுத்துவதை நாம் ஆராயலாமா? பொது போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்நாட்டு நீர்வழிகளில் பசுமை ஹைட்ரஜனை எவ்வாறு பயன்படுத்த முடியும். இது போன்ற தலைப்புகளை ஒன்றாக ஆராய்வது, உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இது போன்ற பல கருத்துகளை பரிமாறிக்கொள்ள இந்த மாநாடு உதவும்.
மனிதநேயம் கடந்த காலங்களில் பல சவால்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் கூட்டான மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் துன்பங்களை வென்று மீண்டு வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட புகை படிவமற்ற எரிபொருள் திறன் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சாதனைகளால் ஓய்வு எடுக்கவில்லை தீர்வுகளை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. தூய்மையான பூமியை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |