முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமியுடன் : மைத்ரேயன் திடீர் சந்திப்பு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, அ.தி.மு.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியை திடீரென சந்தித்து பேசினார். 

1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். 1999-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயன், 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவரை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவர் லட்சுமணன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2002-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மைத்ரேயன், 2019 வரை அப்பொறுப்பில் இருந்தார். 

அதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பக்கம் சேர்ந்தார்  மைத்ரேயன். பின்னர், எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றார். அதன்பிறகு   அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

அதை தொடர்ந்து மைத்ரேயன், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த  சூழ்நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. 

மைத்ரேயன் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதிமுகவில் சேர்ந்தால் தனக்கு ஏதாவது ஒரு பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மைத்ரேயன் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து