முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் சேது எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
Sethu-Express 2024-03-18

Source: provided

திருச்சி : திருச்சி ரயில் நிலையத்தில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்திய ரெயில்வேயின் தெற்கு ரெயில்வே மண்டலத்தில் சென்னை எழும்பூர் - ராமேசுவரம் இடையே சேது எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரெயில் 23 பெட்டிகளை கொண்டது. 

இந்த நிலையில், வழக்கம்போல ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயிலானது நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் அருகே வந்த போது, கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ரெயிலில் இருந்து கீழே இறங்கி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கழன்று ஓடிய பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். இதையடுத்து 20 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்று ஓடிய சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து