முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்: நெல்லையில் மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் குழு விசாரணை

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
Mancholi-tea 2024-03-18

Source: provided

திருநெல்வேலி : மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் விவகாரம் மற்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்துள்ள குழு நேற்று மாஞ்சோலை சென்று விசாரணை நடத்தியது. 

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களின் ஒப்பந்த காலம் 2028-ம் ஆண்டுடன் முடிவடையுள்ளதால் அதற்கு முன்னதாகவே அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம், இது குறித்து விசாரிக்க தலைமை விசாரணை இயக்குநர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, இந்த குழுவானது மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் தலைமை விசாரணை இயக்குநர் அடங்கிய குழுவானது நேற்று நெல்லை சென்றது. இந்தக் குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தியது. 

இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகள் ரவி சிங் (துணை காவல் கண்காணிப்பாளர், யோகேந்திர குமார் திரிபாதி (ஆய்வாளர்) இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா ஆகியோருடன் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில்  ஆலோசனை நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து