முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு:20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      இந்தியா
Jharkant 2024-10-14

Source: provided

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நேற்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனவரி 5-ம் தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிகிறது. நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தும் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான பண மோசடி தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தலைநகர் ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி மணீஷ் ரஞ்சன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி மிதிலேஷ் குமார் தாகூரின் தனிப்பட்ட ஊழியர், சில அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து