முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
Nimalkumar 2025-10-28

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்துள்ளனர் என அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், த.வெ.க.வின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

த.வெ.க.-வின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: த.வெ.க.வின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இக்குழுவில் விவாதிக்கப்பட்டது. விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

கரூர் சம்பவத்தையொட்டி, மக்களை சந்திக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட அனைவரும் காத்திருந்தோம். ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவல் படி அனைத்து ரோடுகளும் தடை செய்யப்பட்டது. த.வெ.க. கொடி கட்டிய எந்த வாகனத்தையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. கரூர் சம்பவத்தன்று அனைத்து நிர்வாகிகளும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

அந்த நாள் இரவு எத்தனை அமைச்சர்கள் அங்கே வந்து நாடகம் நடத்தினார்கள் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். பிரேத பரிசோதனையை உடனடியாக முடித்து விட்டதாக தகவல் கிடைத்தது. கண்டிப்பாக இங்கே எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டோம். எங்களின் குற்றச்சாட்றே காவல்துறையின் மீதுதான். அதனால் தான் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சென்னை கிளம்பினோம்.

அவர்கள் எண்ணம் நிச்சயமாக நடைபெறாது. த.வெ.க. கட்சியை முடக்க நினைத்தார்கள். மக்கள் விஜய் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்துள்ளனர். கரூர் சம்பவம் எப்படி நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்.41 பேர் உயிரிழந்தது தான் மிகப்பெரிய துக்கம், மீள முடியாத துக்கம். 41 பேரின் மரணம் தான் எங்களை கடுமையாக பாதிக்கிறது. எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து