முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

வடசென்னை புளியந்தோப்பு ராஜீவ் நகரில் தாழ்வான மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு விடுப்பட்ட அனைத்து மின்பகிர்மான பெட்டிகளையும் ஒரு மீட்டர் உயரத்தில் உயர்த்தும் பணியினை உடனடியாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

பின்பு தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் 110/11 கி.வோ துணைமின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள 33/11 கி.வோ துணைமின் நிலையம் மற்றும் தண்டையார்பேட்டை 230/33 / 11 கி.வோ துணைமின் நிலையத்தையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். ஆய்வுக்கு பின் தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் மின் தொடர்பான பணிகளில் நிலை குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ. எபினேசர், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம் மூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன், பழனிவேலன், செயற்பொறியாளர்கள் அசோகன், திரு. ஜெகதீஷ்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து