Idhayam Matrimony

கேரி கிர்ஸ்டன் விலகல்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024      விளையாட்டு
Pak 2024-08-21

Source: provided

கடந்த ஏப்ரல் 2024-ல் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன் 6 மாதங்களிலேயே வெறுத்துப் போய் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை உதறித்தள்ளி விட்டார். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் வெள்ளைப் பந்து தொடருக்கு ஜேசன் கில்லஸ்பி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். கேரி கிர்ஸ்டன் தன் ராஜினாமா கடிதத்தை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த கையோடு ஜேசன் கில்லஸ்பியை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் கேரி கிர்ஸ்டனுக்கும் அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டு வந்தன. அணித் தேர்வுகளில் கேரி கிர்ஸ்டனோ, ஜேசன் கில்லஸ்பியோ தலையிட முடியாத அளவுக்கு பரிந்துரைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு இரும்புத்திரைப் போடப்பட்டதுதான் கேரி விலகலுக்குக் காரணம் என்கின்றனர். மேலும் கிர்ஸ்டனுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்குமே ஒத்துப் போகவில்லை. டேவிட் ரீட் என்பவரை ஹை பெர்பார்மன்ஸ் கோச் ஆக நியமிக்குமாறு கிர்ஸ்டன் எத்தனை முறை கேட்டுக் கொண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செவி சாய்க்கவில்லை இது இரு தரப்பினருக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. 

__________________________________________________________________________

சைமன் டவுல் நம்பிக்கை

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டவுல் டோனியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்தை ரிஷப் பண்ட்டால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், "சென்னை அணி ரிஷப் பண்டை ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் நிச்சயம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை எடுக்க சென்னை அணி நிச்சயம் முயற்சிப்பார்கள். ஏனெனில் டோனியை போன்று விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய மேட்ச் வின்னராக செயல்பட கூடியவர். அதன் காரணமாக அவரை எவ்வளவு பெரிய தொகைக்கும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி தயக்கம் காட்டாது" என்று கூறினார்.

__________________________________________________________________________

ஹர்பஜன் சிங் கணிப்பு

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் 5 வீரர்களை தக்க வைக்கும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன்சிங் கூறுகையில், "மும்பை இந்தியன்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடாத அணி. ஆனால் அவர்கள் மிகவும் சிறப்பான அணி. அவர்கள் ஒரு சாம்பியன் அணி. நிச்சயம் அவர்கள் எதிர்காலத்திற்காக ஒரு அணியை உருவாக்க நினைப்பார்கள். அவர்கள் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நிச்சயம் நீக்க மாட்டார்கள். மேலும் பும்ரா அணியில் தொடர்வார். அதேபோல சூர்யகுமார் யாதவும் அணியில் இருப்பார்.

இங்கு ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவாரா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. அதே சமயத்தில் ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணிக்கு இருந்து ஒரு டி20 உலகக்கோப்பையை வென்று இருக்கிறார். எனவே அவரை அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவே பெரிய முயற்சி எடுப்பார்கள். இது தொடர்ந்து ஐந்தாவது வீரராக ஒரு வீரரை அவர்கள் தக்க வைப்பார்கள் என்றால் அது திலக் வர்மாவாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

__________________________________________________________________________

பாக். அணிக்கு பயிற்சியாளர் 

பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் பதவி விலக உள்ளார். 

அவர் கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. மேலும் கேரி கிரிஸ்டன் எடுத்த முடிவுகள் பலவற்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது ராஜினாமாவை பாகிஸ்தான் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து