முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் தீபாவளி கொண்டாட்டம்: மனைவியுடன் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ பங்கேற்பு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      இந்தியா
Mumbai 2024-10-30

Source: provided

மும்பை :  மும்பையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தன் மனைவி பெகோனா கோமஸ் உடன் பங்கேற்றார்.

மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடான ஸ்பெ யின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், குஜராத்தின் வதோதராவில், பிரதமர் மோடியை கடந்த 28-ம் தேதி சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுபடுத்துவது குறித்து இரு தலைவர்கள் விவாதித்தனர். 

இதன்பின் மகராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு பெட்ரோ சான்செஸ் சென்றார். அங்கு, நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில்   தன் மனைவி பெகோனா கோமஸ் உடன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்றார். அப்போது இருவரும், மத்தாப்பு கொளுத்தியதுடன், பட்டாசுகளையும் வெடித்தனர். மேலும், லட்டு உள்ளிட்ட நம் நாட்டின் இனிப்புகளை அவர்கள் சுவைத்தனர்.

முன்னதாக மும்பை கடைவீதிகளுக்கு சென்ற பெட்ரோ சான்செஸ், அங்கிருந்த விநாயகர் சிலையை வாங்கினர். அதற்கு, டிஜிட்டல் யு.பி.ஐ., பரிவர்த்தனை வாயிலாக பணம் செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து