முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதியில் போபண்ணா ஜோடி

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      விளையாட்டு
Bopanna 2024-03-26

Source: provided

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பிரேசிலின் மார்செலோ மெலோ - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பிரேசிலின் மார்செலோ மெலோ - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

___________________________________________________________________________

ராதாவுக்கு சிறந்த பீல்டர் விருது

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய மகளிர் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் நியூசி. 49.5 ஓவா்களில் 232 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 44.2 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியில் ராதா யாதவ் சிறப்பாக ஃபீல்டி செய்தார். 6 மகளிர்கள் சிறந்த ஃபீல்டிங்குக்காக அண்யில் தேர்வாகியிருந்தார்கள். இறுதியில் ராதா யாதவ் வெற்றி பெற்றார். இதை விடியோவாக பிசிசிஐ மகளிர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையிலும் ராதா யாதவ் சிறப்பாக பீல்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________

மெக்டொனால்டின் பதவிகாலம் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் 2027 வரை ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜஸ்டின் லாங்கரிடமிருந்து 2022 முதல் ஆஸி.யின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஆண்ட்ரூ மெக்டொனால்டிம் ஒப்படைக்கப்பட்டது. இவருடையை தலைமையில் ஆஸி. அணி 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்றன. ஆஸ்திரேலியாவுக்கு ஆல் ரவுண்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை (2025-2027) ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்குள் 2027ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள், டி20யில் 2ஆம் இடத்திலும் இருக்கிறது. ஆஸி. சிறப்பாக செயல்பட மெக்டொனால்ட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறியதாவது., அனைத்து அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் என்பது சவாலானதாகவே உள்ளது. இருந்தும் எங்களது அணி சிறப்பாக செயல்படுவது குறித்த பெருமிதம் இருக்கிறது. அனைத்து கிரிக்கெட்டிலும் எங்களது வீரர்கள், பயிற்சியாளர்கள் ஒன்றினைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது என்றார்.

___________________________________________________________________________

வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மையர் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்.,  ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், ஷர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர். ஒருநாள் தொடருக்கான அட்டவணை விவரம்., முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 31 - ஆண்டிகுவா, 2வது ஒருநாள் போட்டி - நவம்பர் 02 - ஆண்டிகுவா, 3வது ஒருநாள் போட்டி - நவம்பர் 06 - பார்படாஸ்.

___________________________________________________________________________

பாக்ஸிங் டே டெஸ்டில் ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது. இந்த தொடரின் டி20 போட்டிகள் டிசம்பர் 9, 11, 12 தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் டிசம்பர் 15, 17, 19 தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூடுதலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்க்க விருப்பம் தெரிவித்தது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி, கிறிஸ்துமஸ் மறுநாள் (டிசம்பர் 26) அன்று பாக்ஸிங் டே டெஸ்டில் இரு அணிகளும் மோத உள்ளன. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியது. இதைத்தொடர்ந்து 28 வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

___________________________________________________________________________

வெளியேறியது அல்-நாசர் அணி

கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது . பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பைரொனால்டோ  தவற விட்டார் . இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து