முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் எல்லை அருகே விபத்து: ஈரான் ராணுவ கமாண்டர் பலி

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      உலகம்
Iran-army 2024-11-04

தெஹ்ரான், பயிற்சியின்போது ஆட்டோ கைரோ விபத்துக்குள்ளானதில் ராணுவ கமாண்டர் ஹமித் மற்றும் அவரது பைலட் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் கமாண்டர் ஹமித் மஜந்தரணி, நேற்று பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சக ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆட்டோகைரோவில் (ஹெலிகாப்டர் போன்ற வாகனம்) பறந்துசென்று பயிற்சி மேற்கொண்டபோது, ஆட்டோகைரோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கமாண்டர் ஹமித் மற்றும் அவரது பைலட் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணம் சிர்கான் எல்லை அருகே ராணுவ நடவடிக்கையின்போது ஜெனரல் ஹமீத் மஜந்தரணி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டார் அமைப்பில் ஹெலிகாப்டரைப் போன்றது ஆட்டோகைரோ. ஆனால் ஹெலிகாப்டரைவிட சிறியதாக எளிமையாக இருக்கும். இது ஈரானில் பைலட் பயிற்சி மற்றும் எல்லை கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு பேர் பயணிக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து