முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்: இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      விளையாட்டு
India-Pak 2024-05-08

Source: provided

கேப்டவுன் : ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்புள்ளது.

நடத்த முயற்ச்சி...

ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் முறையாக 2005-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது. அடுத்து 2007ம் ஆண்டு இந்தியாவில் ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த இரண்டு முறையும் ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஆசிய லெவன்... 

மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 2005 ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பைக்கான ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககாரா, வீரேந்தர் சேவாக், ஜாகீர் கான் அனில் கும்ப்ளே, சோயப் அக்தர். ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விளையாடினர்.

ஜெயவர்த்தனே... 

அடுத்து 2007-ல் நடந்த ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை போட்டிக்கான ஆசிய லெவன் அணி மகிலா ஜெயவர்த்தனே தலைமையில் ஆடியது. அந்தப் தொடரில் வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி ஆகியோர் பங்கேற்றனர். எனவே. மீண்டும் ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து