முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வீரர்களை தக்கவைத்தது ஏன்..? - பஞ்சாப் அணி சி.இ.ஓ. விளக்கம்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      விளையாட்டு
CEO 2024-11-06

Source: provided

சண்டிகர் : ஐபிஎல் ஏலம் நவ.24, 25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிஇஓ சதீஷ் மேனன் இந்த முறை கோப்பையை வெல்லுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் 2 வீரர்களை தக்கவைத்தது ஏன் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2 வீரர்கள் மட்டும்...

இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களது ரீடென்ஷன் (தக்கவைப்பு) வீரர்கள் குறித்து பட்டியலையும் வெளியிட்டார்கள். அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வீரர்களான ஷஷாங் சிங், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரை மட்டும் தக்கவைத்து மற்றவர்களை வெளியேற்றியது. பிரப்சிம்ரன் சிங் 2019இல் இருந்து பஞ்சாப் அணியில் இருக்கிறார். 34 போட்டிகளில் 756 ரன்கள், 22.24 சராசரியுடன் 146.23 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். ஷஷாங் சிங் 14 போட்டிகளில் 164.65 ஸ்டிரைக் ரேட்டுடன் 44.25 சாரசரியுடன் அற்புதமாக விளையாடியுள்ளார்.

மிகப்பெரிய ஆட்டம்...

பஞ்சாப் அணிக்கு சமீபத்தில் ரிக்கி பாண்டிங் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் அணியின் சிஇஓ சதீஷ் மேனன் அளித்த பேட்டியில் கூறியதாவது:  அணியின் முக்கியமான வீரர்களுக்கான திட்டம் எங்களிடம் உள்ளது. விரைவில் அதிகமான ஆச்சரியங்களை பார்ப்பீர்கள். பஞ்சாப் அணிக்கென்று தனித்துவமான வீரர்களை உருவாக்குகிறோம். இந்தமுறை நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மிகப்பெரிய ஆட்டத்தை ஆடுவோமென நம்புகிறேன்.

ஷஷாங் சிறப்பாக...

கடந்த 6 வருடமாக பிரப்சிம்ரன் சிங் வளர்ச்சியை கவனித்து வருகிறோம். அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். கடந்த ஆண்டு சிறப்பான பல இன்னிங்ஸை விளையாடினார். பெரிய தொடர்களில் சிகரமாக அவர் இருப்பாரென நம்புகிறோம். பல பேட்டிங் ஆர்டரில் ஷஷாங் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த வருடம் அவரது மன உறுதியை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதே ஸ்டைலையும் ஆர்வத்தையும் அவர் தொடர்கிறார். அதனால்தான் அவரை அணியில் தக்கவைத்தோம். இந்த 2 வீரர்கள் எங்களுக்கு சிறப்பாக பொருந்தியுள்ளார்கள்.

நாங்கள் கோப்பையை...

இந்த முக்கியமான ஏலத்தில் நாங்கள் அதிக பணத்தொகையுடன் செல்கிறோம். அந்த நேரத்தில் எது இருக்கிறதோ அதை தேர்ந்தெடுப்போம். எங்களது புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருப்பதால் இந்த ஏலம் மகிழ்ச்சியானதாக இருக்கும். ரிக்கி பாண்டிங் கிரிக்கெட்டில் மிகக் கூர்மையானவர். எங்களது அணி சிறப்பான அணியாக வளர்வதை காண்பீர்கள். எங்களது இலக்கு கோப்பையை வெல்வதே, அதைவிடவும் வேறெதுவும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து