முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி தலைமறைவு?

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      சினிமா
Kasthuri-2024-11-04

Source: provided

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும் கடும் கண்டனங்கள் குவிந்தன. தமிழக பா.ஜ.க.வும் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதற்கிடையே நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரினார். எனினும், அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.  

இந்த நிலையில், கஸ்தூரி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு கஸ்தூரி தப்பி சென்றதாகவும் அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து