எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாகர்கோவில் : நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3-ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகின்றன.
8-ம் திருவிழாவான டிசம்பர் 1-ம் தேதி காலை 6.15க்கு திருப்பலி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் அன்று இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.
9-ம் திருநாளான டிசம்பர் 2-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்து ஆசி வழங்குகிறார். தொடர்ந்து அன்று இரவு 10.30 மணிக்கு 2-ம் நாள் தேர் பவனி நடக்கிறது.
10-ம் திருநாளான டிசம்பர் 3-ம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழாத் திருப்பலியும், 8 மணிக்கு மலையாள திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும்.
தேர் பவனியின் போது தேருக்கு பின்னால் பக்தர்கள் விழுந்து கும்பிடு நமஸ்காரம் செய்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள். உப்பு, மெழுகுவர்த்தியும் காணிக்கையாக வழங்குவார்கள். சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி டிசம்பர் 3-ம் தேதி, குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை பஸ்காலிஸ், உதவி பங்கு தந்தை ஷாஜன் செசில், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜேசுராஜா, பங்கு பேரவை செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |