எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மாற்றுத்திறனாளி நண்பர்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முழுமையாகப் பாடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்த பிரதமர் மோடி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கூறியிருப்பதாவது., இந்தியாவில் உள்ள நமது மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கவுரவம், சுயமரியாதை ஆகியவற்றின் சக்தியாக மாறி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். அவர்களுக்காக பல கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன; பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நான் பொது வாழ்விற்கு வந்ததிலிருந்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன். பிரதமரான பின், இந்த சேவையை தேசத்தின் தீர்மானமாக மாற்றினேன். எந்தவொரு நபரும் உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளாமல் அவரது திறமைக்கு ஏற்ப முழு மரியாதையுடன் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெறுகின்ற அனைவரையும் உள்ளடக்கிய சூழலை அரசு விரும்புகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று நாடுமுழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். இந்த முடிவுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் உருவாக்கின. நமது மாற்றுத்திறனாளிகள் இன்று இந்தியாவை உருவாக்குவதில் அர்ப்பணிப்பு மிக்க பங்குதாரராக இருந்து நம்மை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மாற்றுத்திறனாளி நண்பர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு அளித்திருக்கும் மரியாதை இந்த ஆற்றலின் அடையாளமாகும். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்க்கை எளிமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதே அரசின் அடிப்படைக் கொள்கையாகும்.
2047-ம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நமது மாற்றுத்திறனாளி நண்பர்கள் உலகம் முழுவதற்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பார்கள் என்பதை நான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இந்த இலக்கை அடைய இன்று நாம் உறுதியேற்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் பெரிய பங்களிப்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்
26 Feb 2026சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
-
எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தென்கொரியாவை அழிப்போம்: வடகொரியா தலைவர் எச்சரிக்கை
27 Feb 2026பியாங்யாங், தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
-
பாகிஸ்தான் குண்டுமழை.. ஆப்கானிஸ்தானில் 133 பேர் பலி
27 Feb 2026லாகூர், தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது இதில் 133 பேர் க
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
27 Feb 2026பென்னாகரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு
27 Feb 2026பகிர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் நேற்று (பிப். 27) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
-
தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. கண்டனம்
27 Feb 2026சென்னை, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.
-
ரஷ்யா செல்கிறார் பாக். பிரதமர்
27 Feb 2026லாகூர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.- ஆப்கானிஸ்தானுக்கு சீனா அழைப்பு
27 Feb 2026பெய்ஜிங், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
-
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: வாபஸ் பெற்றார் ராமதாஸ்
27 Feb 2026சென்னை, மாம்பழ சின்னம் தொடர்பாக அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
-
நேபாள பொதுத் தேர்தல்: 3 நாட்கள் இந்திய எல்லை மூடல்
27 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 2 முதல் 3 நாள்களுக்கு இந்திய-நேபாள எல்லை மூடப்படுகிறது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
27 Feb 2026மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்
27 Feb 2026டாக்கா, வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


