முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் குன்றத்தில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Thiruparankundram--2024-12-

மதுரை, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.

அங்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13-ம்  தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து