முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பா? தமிழ்நாடு அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      தமிழகம்
Tamilnadu 2024-12-13

Source: provided

சென்னை: தமிழகத்தில் வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்று விளக்கமளித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருடத்துக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன எனவும் அதில் 82 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள் என்றும் ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருக்கிறது. பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 1,000 குழந்தை பிறப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டு 10.4 சதவீதம் ஆகவும், 2022-23-ம் ஆண்டு 10.2 சதவீதம் எனவும், 2023-24-ம் ஆண்டு 8.27 சதவீதம் என்றும் உள்ளது. நடப்பாண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 838 ஆக உள்ளது. இதில் 3 ஆயிரத்து 838 குழந்தைகள் இறந்துள்ளது. இது இறப்பு விகிதத்தில் 7.8 சதவீதம் ஆக பதிவாகியிருக்கிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து