முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: பிப்ரவரி 8-ல் தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன பொதுக் கூட்டம்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

சென்னை: நிதிநிலை அறிக்கையில்  தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப். 8ல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க.  அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதல்வரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8(சனிக்கிழமை) அன்று மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க.  சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார்.  அப்போது, தேர்தல் நடைபெறும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின், தி.மு.க.  எம்.பி.க்கள் பலரும் பட்ஜெட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து