முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு 5 நாள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை

புதன்கிழமை, 12 மார்ச் 2025      தமிழகம்
Katchatheevu-festival-2024-

ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு வருகின்ற மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப்படகுகளும் செல்ல விழா கமிட்டியிடம் பதிவு செய்துள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருவிழாவிற்கு செல்ல பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இதையொட்டி நேற்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மீன்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பதிவு செய்யப்பட்டு, ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ஏறி படகின் உறுதித்தன்மை, நீளம், அகலம் படகிற்கான ஆவண்ஙகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதேபோல் திருவிழாவுக்கு செல்ல பதிவு செய்து, பாம்பன் கடல் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவிழாவிற்கு செல்ல பெயர் பதிவு செய்துள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்கள் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு வரும்போது படகின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் மீன் துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கச்சத்தீவு திருவிழானையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து