முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா-உக்ரைன் இடையே 30 நாட்கள் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள்

புதன்கிழமை, 12 மார்ச் 2025      உலகம்
Rasia-Ukrain 2025-03-12

Source: provided

ரஷியா : ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பூட்டிய அறைக்குள் சுமார் 7 மணிநேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாக உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும், ரஷியாவுடன் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் 30 நாள்கள் போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட வேண்டும், உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும், பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் ஒருபகுதியாக இருக்க வேண்டும், உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்வதுடன், கனிமவள ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் நீண்டகால உறவையும் பேண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது ``போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கும் செல்லவிருக்கிறோம். போர் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறோம். எங்களால் முடியாவிட்டால், நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்’’ என்று தெரிவித்தார். 

மேலும், ஜெட்டா பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ் கூறியதாவது, உக்ரைன் தரப்பு வாதங்களைப் புரிந்துகொண்டு பரிசீலிக்கும் அமெரிக்காவுக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் நன்றி. இந்த முன்மொழிவை ஏற்க உக்ரைன் தயாராக உள்ளது. ரஷியாவையும் அவ்வாறே செய்யச் சொல்வது அமெரிக்காவின் பொறுப்பே. ரஷியா ஒப்புக் கொண்டால், போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும். போரின் முதல் நொடியிலிருந்தே உக்ரைன் அமைதியைத்தான் நாடுகிறது, மேலும், போர் மீண்டும் வராமல் தடுக்க முடிந்தவரை, விரைவாகவும் நம்பகமான முறையிலும் அதனை அடைய எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து