முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. வில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 140ஆக உயர்த்த விஜய் முடிவு?

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      அரசியல்
Vijay 2024-03-21

சென்னை, த.வெ.க.  மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார்.

இதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில்   6வது கட்டமாக இறுதிக் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை  பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தும் நிலையில், அதன் பிறகே இறுதி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து