எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.
பேரவையில் பேசிய அவர்,
2025-26 ஆம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப்பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட 22 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் திருவண்ணாமலை. நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பத்தூர். திருநெல்வேலி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி. ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


