முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன்முறையாக ஓய்வு குறித்து மனம் திறந்தார் விராட் கோலி

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

பெங்களூரு : கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன? என்ற சுவாரசிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி. 

ஐ.பி.எல்.  தொடர்...

ஐ.பி.எல்.  தொடரில் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி) அணிக்காக விளையாடுவதற்காக பெங்களூரு சென்றடைந்துள்ள விராட் கோலி அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சிறந்த தருணம்...

அப்போது அவர் பேசியிருப்பதாவது: “விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு தேசத்தில், ஆடவர்களை மையப்படுத்தி மட்டும் விளையாட்டை வளர்க்க முடியாது. இதனால், மகளிர் கிரிக்கெட் பிரீமியர் லீக் மேலும் வளர்ச்சியடையும். 2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெட் இடம்பெற்றால் அப்போது இந்தியா வென்று பதக்கத்துடன் திரும்புவது இந்தியாவுக்கு சிறந்த தருணமாக அமையும்.

திரும்பப்பெறுவேன்...

அந்த ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அப்போது, நான் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், அந்த ஒரேயொரு போட்டியில் விளையாடுவதற்காக மட்டுமாவது எனது ஓய்வு முடிவை திரும்பப்பெறுவேன்.

ஓய்வு குறித்து...

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதைக் குறித்து சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால், இதே கேள்விக்கான பதிலை அறிய வேண்டி சக வீரர் ஒருவரிடம் இது குறித்து வினவினேன். அப்போது அவரும் இதே பதிலையே தந்தார். ஒருவேளை, நிறைய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வேன்” என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து