முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருசு விமர்சனம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      சினிமா
Peru-review 2025-03-17

Source: provided

கிராமம் ஒன்றில் மதிப்பு மிக்க குடும்பத்திலுள்ள உள்ள ஒரு முதியவரின் மகன்கள் சுனில் மற்றும் வைபவ். முதியவர் ஒரு நாள் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று இறந்து விடுகிறார். ஆனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் தினறும் குடும்பத்தார், எப்படி சிகலை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதே ’பெருசு படம். எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கும் வைபவ், இயல்பான காமெடி மூலம் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். வீட்டின் மூத்த பிள்ளையாக வரும் சுனில், நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். சாந்தினி, நிஹாரிகா,  பாலசரவணன் உள்ளிட்ட அனைவரும் எதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை உயிரோட்டத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை கையில் எடுத்து கொஞ்சம் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து