முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் - விமர்சனம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      சினிமா
City-of-Dreams-Review 2025-

Source: provided

அமெரிக்கா நாட்டின் குழந்தை கடத்தலை மைய்யமாக வைத்து உருவாகி இருக்கும் படம் சிட்டி ஆஃப் டிரீம்ஸ். அமெரிக்காவில் குழந்தை கடத்தல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் .அமெரிக்காவை ஒட்டியுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் சிறுவன் ஆரி லோபஸ், கால்பந்தாட்ட கனவுகளோடு அமெரிக்கவுக்கு குடி வருகிறான். ஆனால் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொத்தடிமையாக பணியமர்த்தப்படுகிறான். அவனைப் போல் பல சிறுவர்கள் அங்கு இருக்கிறார்கள். எப்படியாவது அங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்று நினைக்கிறான் ஆரி லோபஸ், அவனது வலி மிகுந்த போராட்டத்துடன் எதார்த்த கதை அமைத்து அதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும்  சிறுவன் ஆரி லோபஸ், வசனமே பேசாமல் தன் கண்கள் மூலமாக பல உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார். அமெரிக்கா என்றாலே ஆடம்பரம் அழகு பந்தா பகட்டு மட்டும் அல்ல அங்கேயும், குற்ற செயல்கள் இருக்கத்தான் செய்கிறது என்பதை பதிவு செய்கிறது இப்படம். அமெரிக்காவின் இன்னொரு பக்கத்தை தையிரியமாக உலகுக்கு காட்டியிருக்கும் தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கரை நிச்சயம் பாராட்டலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து