முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
duraimurugan-2023-05-01

Source: provided

சென்னை : வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், வெண்கொடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு முன்வருமா என உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வெண்குடியில் தடுப்பணை கட்ட வேண்டியது அவசியம் தான் என்றும் ரூ.70 கோடியில் 1,600 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக கூறினார்.

மேலும், தடுப்பணை கட்டினால் 12 கிராம ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும் என கூறிய அவர் 2,400 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும் எனவும், எனவே நிதி நிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் வெண்குடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து