முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நேற்று டெல்லியில் தங்கி இருந்த அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ம் தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசினார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முழுவதும் டெல்லியில் இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து