Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Delhi-cm 2025-02-20

Source: provided

 புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதன்படி, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி எனவும் இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட 31.5% அதிகமாகும் என்றும் கூறினார்.

பெண்களின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 5,100 கோடி, இதன் மூலமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துக்கு ரூ. 2,144 கோடி, 100 அடல் கேன்டீன்கள் நிறுவ ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து