முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      உலகம்
Jail-1

Source: provided

மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு முக்கிய அரசியல் கைதிகள் உள்ளிட்ட 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டை ஆளும் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மியான்மர் ராணுவ அரசின் இடைக்காலத் தலைவரான மின் அவுங் ஹ்லைங் சுமார் 4,893 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் அதன் மூலம் தலைநகர் யாங்கோனிலுள்ள இன்செயின் சிறைச்சாலையிலிருந்து 19 பேருந்துகள் மூலம் சிறைக் கைதிகள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த உத்தரவின்படி 13 வெளி நாட்டவரும் விடுதலையாகவுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களினால் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர மீதமுள்ள சிறைக் கைதிகளின் தண்டனையானது குறைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகள் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தண்டனையுடன் புதிய தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தற்போது விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ‘ஸ்டீல்’ என்ற புனைப் பெயரில் இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த இயக்குநரான த்வீ மியிட்டார் என்பவரும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும், திங்யான் எனும் மியான்மரின் பாரம்பரியமானப் புத்தாண்டானது வழக்கமாக மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து அந்தக் கொண்டாட்டங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து