முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் மோகன் சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      இந்தியா
ED

Source: provided

அமராவதி : ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த சூழலில் ஜெகன்மோகன் ரெட்டி மீது பணமோசடி, லஞ்சமாக நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக 2011ம் ஆண்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த சூழலில் அந்த வழக்கை அமலாக்கத்துறை தற்போது விசாரித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் உள்ள 27.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், 377 கோடி ரூபாய் மதிப்புள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் ஆகியவை தற்போது முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட தனது நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு 793 கோடி ரூபாய் என்று டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், ஜெகன் ரெட்டிக்கு சொந்தமான ரகுராம் சிமெண்ட் நிறுவனத்தில் 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்கு பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேரில் சுரங்கம் அமைப்பதற்காக அந்த நிறுவனத்துக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து