முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் காட்டு யானை தாக்கிய பெண் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Elephant-Attack-2024-04-27

Source: provided

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் சரசு(58). இவர் நேற்றுமுன்தினம் மாலை அங்குள்ள பொக்கபுரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த காட்டு யானை, சரசை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்குள்ளவர்கள் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து