முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. 

துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில், 2024- ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

துணை ஆட்சியா் 16, காவல் துணைக் கண்காணிப்பாளா் 23, வணிகவரி உதவி ஆணையா் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் 21, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகிய 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த டிச. 10 முதல் டிச. 13-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெற்றது. முதன்மைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு கடந்த ஏப். 7 ஆம் தேதி முதல் ஏப். 9 ஆம் வரை நேர்காணல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து