முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் குடியிருப்பு பகுதியில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து - விமானி பலி

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      இந்தியா
Helicopter --

Source: provided

குஜராத் : குஜராத்தில் குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அம்ரேலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனத்தின் விமானம், பகல் 12.30 மணியளவில் சாஸ்திரி நகர் குடியிருப்புப் பகுதியில் விழுந்துள்ளது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மரத்தில் மோதி, குடியிருப்புப் பகுதியில் இருந்த திறந்தவெளி நிலத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. 

தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விமானத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விமானத்தை இயக்கிய பயிற்சி விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை தரப்பின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து