முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது: தங்கம் விலை திடீர் சரிவு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை :  தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனையானது.

உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி இருந்தது தங்கம் விலை. இந்த நிலையில் நேற்று (ஏப்.23) தங்கம் விலை குறைந்து விற்பனையானது.

நேற்று (ஏப்.23) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ.275 என விலை சரிந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.72,120 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (ஏப்.22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் மீதான விலை பவுனுக்கு ரூ.2,200 என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் 30-ம் தேதி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க விரும்பும் மக்கள் தங்கத்தின் விலை மேலும் குறைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததும் அண்மைய விலை ஏற்றத்துக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து