முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகூர்த்த நாட்கள், வார விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      தமிழகம்
Bus 2023-05-24

Source: provided

சென்னை : திருவண்ணாமலை , நாகை,  வேளாங்கண்ணி  ஓசூர் மற்றும் பெங்களுரு செல்ல கிளாம்பாக்கம் ,  மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து 9ம்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறி்ப்பு:-  09 ம்தேதி  (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 10 ம்தேதி  (சனிக்கிழமை) மற்றும் 11 (ஞாயிறுக் கிழமை)  வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி,    09 ம்தேதி 650 பேருந்துகளும், 10 ம்தேதி 665 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09 மதேதி 100 பேருந்துகளும் 10ம்தேதி  90 பேருந்துகளும்  மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும்  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 09 ம்தேதி  24 பேருந்துகளும் 10 ம்தேதி  100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும்,  11 ம்தேதி  சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 950 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,841 பயணிகளும் சனிக்கிழமை 7,385 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,070 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்  தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை  மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து