முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
Umar-Abdulla

ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இந்நிலையில் ஜம்முவில் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர், இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜம்முவில் பொதுமக்களை குறிவைத்து ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், நமது இந்திய பாதுகாப்புப் படைகள் விரைவாகவும், திறமையாகவும் செயல்பட்டு சதி முயற்சியை முறியடித்தனர்.

இந்த சூழ்நிலைகள் இந்தியாவால் உருவாக்கப்படவில்லை. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலே காரணம். அங்கு அப்பாவி மக்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். எல்லையின் இருபுறமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து