முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துவண்டு விட வேண்டாம்: பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      தமிழகம்
CM Stalin 2024-12-10

Source: provided

சென்னை : பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து   7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் எழுதி இருந்தனர்.  தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில்,  தேர்வு எழுதியவர்களில்  7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 95.03 ஆகும். 

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், "தேர்ச்சி பெற இயலாத மாணவர்களே துவண்டுவிடாதீர்கள். உடனடியாக துணைத்தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறுங்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதி செய்யும் - தமிழ்நாடு முதல்வர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 7.47 லட்சம் மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் உங்கள் பிள்ளைகள் தேர்ச்சி அடைந்த செய்தி கேட்டு உங்களைப் போலவே  நானும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன்.  கல்விதான் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கிற மிகப்பெரிய சொத்து. யாராலும் அழிக்க முடியாத சொத்து. உங்களுக்கு உதவ எல்லா வகையிலும் தமிழக அரசு தயாராக இருக்கிறது. வளமான எதிர்காலம் நோக்கி உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்க உள்ள உங்கள் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.. வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து