முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய் பிரச்சாரங்களில் ஈடுபடும் பாகிஸ்தான்: வெளியுறவுச் செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Vickram-Misri

புதுடெல்லி, ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் தொடர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் நேற்று (மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர். வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இதற்கு இந்தியா பொறுப்புடனும், அளவிடப்பட்ட முறையிலும் பாதுகாப்புக்கான எதிர்வினையை ஆற்றி உள்ளது.

நேற்று காலையும் ஆத்திரமூட்டக்கூடிய, தீவிரமான தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தானின் செயல் ஆத்திரமூட்டலையும், தீவிரத்தையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா அளவான முறையில் பதிலளித்தது. இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் இந்திய அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைவதையும் அவரது சில கருத்துக்களில் கண்டோம். குடிமக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை விமர்சிப்பதைப் பார்ப்பது பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில், அவ்வாறு விமர்சிப்பது வெளிப்படைத்தன்மை நிறைந்த செயல்படக்கூடிய ஜனநாயகத்தின் ஓர் அடையாளமாகும். பாகிஸ்தானுக்கு இதில் பரிச்சயம் இல்லாதது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

நேற்று (சனிக்கிழமை) காலை ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி நகரத்தின் மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியது. இதில், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் குமார் தாபா கொல்லப்பட்டார். ஃபிரோஸ்பூர் மற்றும் ஜலந்தர் உள்ளிட்ட இடங்களில் ஒரே இரவில் சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்தியாவைப் பிளவுபடுத்தும் இந்த தவறான முயற்சிகள் தோல்வியடையும். பாகிஸ்தான் இந்திய தளங்களை குறிவைப்பது குறித்து தொடர்ந்து பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகிறது. 

இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு, மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் போன்றவற்றின் பெரும் பகுதிகள் தாக்கப்பட்டு அழிக்கப்படுவதாகக் கூறப்படும் கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பொதுமக்களையும் பொதுமக்களின் உடமைகளையும் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. பாகிஸ்தான் அரசால் பரப்பப்படும் பொய் மூட்டையால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து