முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Plus-2 2024-05-06

Source: provided

சென்னை : பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில்  எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதிய இந்த தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் தேர்ச்சி பெற்றவர்கள் : 7,43,232 (92.09 %). மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,39,283 (88.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 11,025. தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை  8,07,098. மாணவியர்களின் எண்ணிக்கை : 4,24,610. மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,488. தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 9,205, தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8,460 (91.91%). தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 113(90.40%). தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 4,326. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 950 (21.96%).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து