முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

’மாமன்’ திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 19 மே 2025      சினிமா
Maman 2025-05-19

Source: provided

சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது. தனது அக்கா மீது காட்டும் அன்பவை விட அக்கா மகன் மீது அதிகம் அன்பு காட்டுகிறார். அக்கா மகனும் பெற்றோரை விட சூரியுடன் தான் அன்பாக இருக்கிறார். நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின் இல்லற வாழ்வில், அக்கா மகனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சூரி குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதை கண் கலங்கும்படி சொல்வதே ‘மாமன்’ திரை படம்.

கதை எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நாயகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை தனது நடிப்பு மூலம் மீண்டும் ஒருமுறை சூரி நிரூபித்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரம், ஆக்‌ஷன் ஹீரோ என்று தனது ஆரம்பக்கட்ட படங்களில் அடையாளப்படுத்திக் கொண்ட சூரி, இதில் கமர்ஷியல் நாயகனாக கலகலப்பாக வலம் வருவதோடு, செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான நடிப்பின் மூலம் இதயத்தை கனக்க வைக்கிறார். மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் சுவாஷிகா. சூரியின் அக்காவாக நடித்திருக்கும் அவர் கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார். மொத்தத்தில் இந்த ‘மாமன்’ உறவுகளால் நிறைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து