முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு 17 பேர் பலி; 50 பேரின் கதி என்ன? பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார்

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      இந்தியா
Uttarakhand-Flood-2005-08-05

டேராடூன், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர். 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தாராலி பகுதியில் கீர் கங்கை நதி பகுதிகளில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அந்தப் பகுதியில் பல காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் ஒரு சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டடங்களில் சேதம் ஏற்பட்டது. பல வீடுகள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.  மீட்புபணிகளில் உதவி செய்ய இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையைச் (ஐ.டி.பி.பி.) சேர்ந்த வீரர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

 பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் ' உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பு காரணமாக உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இதனுடன் பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்விற்கும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். முதல்வர் புஷ்கர் தமியுடன் பேசி, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பின் கீழ், நிவாரணம் மற்றும் மீட்புப் படையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கு உதவ கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டோம்.' எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து