முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைநிலை ஆளுநருடன் மோதல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : துணைநிலை ஆளுநருடன் எந்த மோதலும் இல்லை என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம்   கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருடன் எந்த பிரச்சினையும் இல்லை. மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமானது. அரசின் வேகமான செயல்பாட்டுக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது எனக்காக கேட்பதில்லை. வரும் கால தேவை என்பதால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் திட்டங்களை கேட்டு பெறுகிறோம். அமைச்சர்கள் இதற்காக டெல்லி சென்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என கூறுகிறார்களே என கேட்டபோது, “கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி எப்படி நடந்தது என எல்லோருக்கும் தெரியும். யாருடைய ஆட்சியில் எந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதையும் மக்கள் அறிவார்கள்” என்று முதல்வர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து