முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரேயாஸ் வித்தியாசமான சாதனை

திங்கட்கிழமை, 19 மே 2025      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  12-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் 2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.

மேலும் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணியை 2 முறையும் (2019 & 2020), கொல்கத்தா அணியை ஒரு முறையும் (2024) பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.

________________________________________________________________________________________________________

சுப்மன் கில் அதிவேக 5,000 ரன்கள்

ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில்  நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.  முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார். 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.

________________________________________________________________________________________________________

கே.எல்.ராகுல் மாபெரும் சாதனை 

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்  டெல்லியில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக கே.எல். ராகுல் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிக்காக விளையாடிய போதும் ஐ.பி.எல். தொடரில் சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ராகுல் படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் டெல்லி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 93 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

________________________________________________________________________________________________________

ஜூனியர் கால்பந்து: இந்தியா சாம்பியன்

7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - நடப்பு சாம்பியன் வங்காளதேசம் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

________________________________________________________________________________________________________

பிளேஆப் சுற்றில் பஞ்சாப் அணி

டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது. 11 ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.

________________________________________________________________________________________________________

சுப்மன் கில் குறித்து ரவிசாஸ்திரி

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்துள்ளார். இதனால் அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பும்ராவின் பணிச் சுமையை  கருத்தில் கொண்டு சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப் படலாம் எனத் தெரிகிறது. ஆனால் சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் "சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என பேசுவார்கள். வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என்பது அடிக்கடி வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில நேரம் அவ்வாறு சொல்பவர்களிடம், நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள், எவ்வாறு விளையாடினீர்கள் என்று பாருங்கள் என்று சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து