Idhayam Matrimony

'ஸ்கூல்' திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 26 மே 2025      சினிமா
School-movie-review 2025-05

Source: provided

தனது பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால், இந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளவதோடு, சாதி, மத பிரிவினையோடு வெற்றி மட்டுமே வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கிடையே, அந்த புத்தகத்தை மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத உருவம் என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் அதை ஏற்க மறுப்பதோடு, அதன் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். ஆனால், அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பள்ளியில் இருக்கும் அமானுஷய சக்திகள் குறித்து சாமியார் ஆர்.கே.வித்யாதரன் கண்டுபிடிப்பதோடு, அந்த அமானுஷயங்களை வரவைத்து எதற்காக இப்படி செய்கிறார்கள், என்று கேட்க முயற்சிக்கிறார். இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான யோகி பாபு மற்றும் பூமிகா சாவ்லா, அந்த பள்ளிக்கு மீண்டும் வர, அவர்களை பார்த்ததும் அந்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகிறது.அவர்கள் யார்? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்பதை, வெற்றி, தோல்வியை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கூறும் விதமாக சொல்வதே ‘ஸ்கூல்’ படத்தின் கதை.

பூமிகா சாவ்லாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், வெற்றி மற்றும் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையை அழுத்தமாக பதிவு . மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான வசனங்கள் பாராட்டும்படி இருக்கிறது. மொத்தத்தில் ‘ஸ்கூல்’ அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து