முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      உலகம்
India 2023-09-17

Source: provided

புதுடில்லி : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வந்த ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அணுசக்தி நிலைகளை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானம் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமாதான முயற்சிகளை மேற்கொண்டு, இருநாடுகளிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக, பேச்சுவார்த்தை உரையாடல் மற்றும் ராஜதந்திர வழிகளில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அணுஆயுத தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கிறது. நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நட்புறவை கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் தேவையான அனைத்து விதமான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இரு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து