முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் ஐ.டி. ஊழியர் படுகொலை: போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      தமிழகம்
Murder 2023-07-06

திருநெல்வேலி, நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின்குமார் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.ஐ.ஜி. விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, சொந்த ஊருக்கு சென்ற கவின்குமார் 3 நாட்களுக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரண் அடைந்தார்.

இந்த கொலை சம்பவம் பூதாகாரமான நிலையில் கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து ஆறுமுகமங்கலம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, இந்த கொலை தொடர்பாக பெண்ணின் பெற்றோரான எஸ்.ஐ.க்கள்   சரவணன், கிருஷ்ணகுமாரி மீது போலீசார்  வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின்குமார் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.ஐ.ஜி. விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து