Idhayam Matrimony

டாக்டர் எழுதும் மருந்துச்சீட்டை படிக்கும் 'குரோக்' ஏ.ஐ.: மஸ்க்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      உலகம்
Elon musk 2023-07-13-

Source: provided

வாஷிங்டன் : டாக்டர் எழுதும் மருத்துவ சீட்டை எலான் மஸ்க் படிப்பது போன்று குரோக் ஏ.ஐ.  

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஐடி, சினிமா, மருத்துவம் எனப் பல முன்னணித் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, பலரையும் வேலை இழப்புக்கு உள்ளாக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவை எடுத்துக்கொண்டால், யாரும் நடிக்காமல் ஒரு திரைப்படத்தையே எடுத்து முடிக்கும் அளவுக்கு ஏஐ ஆதிக்கம் செலுத்துகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, எக்ஸ் தளத்தின் குரோக், கூகுளின் ஜெமினி போன்றவை மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐகளாக உள்ளன. இந்த ஏஐ மூலம் தேடப்படும் தகவல்கள் சில வினாடிகளில் மொத்தமாகக் கிடைத்து விடுவது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏஐ -க்கள் குறித்து பலரும் தங்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், குரோக் ஏஐ-யின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்சூ என்ற பயனர், ஒரு மலையேற்றத்தின்போது குரோக் 4 கேமராவில் அங்குள்ள தாவரங்களைக் காட்டி, அவற்றின் பெயரைக் கூறுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு குரோக் உடனடியாகப் பதிலளித்துவிட்டது. சிலவற்றை யூகங்களின் அடிப்படையில் பதிலளித்துள்ளது. இதைக் கண்டு வியந்து போன அவர், தனது எக்ஸ் தளத்தில் இதைப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: "உங்கள் கேமராவை எதை நோக்கி வேண்டுமானாலும் காட்டுங்கள். அது என்ன என்பதை குரோக் சொல்லிவிடும். எனது டாக்டரின் மருந்துச்சீட்டில் உள்ள எழுத்தைக் கூட அது படித்துவிடக்கூடும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து