முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் தொடர் தாக்குதல்: மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

மாஸ்கோ : உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வருவதை முன்னிட்டு மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.அதனை பொருட்படுத்தாமல் உக்ரைன் இணைய முயன்றதால் 2022-ம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவியை வழங்கின. எனினும் உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி தொடக்கம் முதல் ரஷ்யாவின் கையே ஓங்கி உள்ளது.எனவே போரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடினர். அதன்பிறகு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீதான பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார். அதன்படி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தை முடியும் வரை தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு உக்ரைன் வலியுறுத்தியது. ஆனால் ரஷ்ய அதிபர் புதின் அதனை நிராகரித்தார். ஏற்கனவே உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில் தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள யப்லுனிவ்கா கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து