முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'தமிழ் மொழி' நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
CM-1 2025-06-16

Source: provided

தஞ்சை : சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் வீரவிஜயன் – தனுஸ்ரீ இணையர் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

1967-க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லாது. அண்ணா ஆட்சிக்கு வந்தப் பிறகு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என தீர்மானம் நிறைவேற்றினார். சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா. நாட்டிலேயே முதன்முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து சட்டமாக்கியது தமிழ்நாடுதான்.

சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது நமது நீண்டநாள் கோரிக்கை. தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கலைஞர். குழந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து